• May 10 2024

கனவு நாயகி ராஷ்மிகாவின் சிறு வயது புகைப்படங்கள்…அடடே அந்தக்காலத்தில் கூடி இவ்வளவு அழகாக இருக்காங்களே…!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகிலே தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானவரே நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்த கன்னட திரைப்படமான 'கிரிக் பார்ட்டி' என்ற படமே இவருக்குப் புகழை பெற்றுக் கொடுத்திருக்கின்றது. எனினும் இவருக்கு தமிழ் சினிமாவில் அறிமுகத்தைக் கொடுத்தது கார்த்தி நடிப்பில் வெளியாகியிருந்த 'சுல்தான்' என்ற படமே.

எனினும் இவர் நடிப்பில் வெளியான படங்களிலே என்றுமே நம்மால் மறக்க முடியாத படம் என்றால் அது 'கீதா கோவிந்தம்' தான். விஜய்தேவர்கொண்டாவுடன் இவர் இணைந்து நடித்துள்ள இப்படமே இவரை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்று சேர்த்தது.

இதனைத் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வந்த இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்து வருகின்றார். மேலும் இவர் சமீபத்தில் புதிய தொழில் ஒன்றினைத் தொடங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. அதாவது 'ப்ளம்' என்ற அழகு சாதனப் பொருட்கள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபகாலமாக திரைப்பிரபலங்கள் பலரினதும் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து தற்போது நடிகை ராஷ்மிகாவின் புகைப்படமும் வெளியாகி இருக்கின்றது.

அதில் இவர் செம கியூட்டாக இருக்கின்றார். அதுமட்டுமன்றி சிறிய வயதில் கூடி இவ்வளவு அழகாக இருந்திருக்காரே என்று பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இதனை பார்த்த நம்ம ராஷ்மிகா ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா? அப்புகைப்படத்தை அதிகளவில் ஷேர் செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement