• May 13 2024

மாலைதீவை மயக்கும் காஞ்சனா-3 பட நடிகை…வெளியான ஹாட் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலக பயணத்தில் முதலில் ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளின் விளம்பர படங்களில் நடித்து பின் சினிமாவில் காலடி எடுத்து வைத்த ஒருவரே நடிகை வேதிகா. இவர் தமிழ் சினிமாவில் அர்ஜூன் நடித்த 'மதராஸி' படத்தில் அவருடன் இணைந்து நடித்து அதன் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து தென்னிந்தியாவில் முக்கிய கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வருகின்றார்.

இவர் நடித்த படங்களிலே குறிப்பாக சரண் தயாரிப்பிலும் மற்றும் ராகவா லாரன்ஸ் இயக்கத்திலும் உருவாகி இருந்த 'முனி' படத்தில் லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பின்னர் சிம்புவுக்கு ஜோடியாக 'காளை' என்ற படத்திலும் நடித்திருந்தார். அந்த படத்தில் இடம் பெற்றிருந்த 'குட்டிப்பிசாசு…' என்ற பாடலில் இவரது நடனம் பரவலாக பலராலும் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அப்படங்களை தொடர்ந்து பின் ஏ. ஆர் ரஹ்மான் இசையில் கலா பிரபு இயக்கத்தில் 'சக்கரக்கட்டி' என்ற படத்தில் நடிகர் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்துக் கலக்கியிருந்தார். மேலும் இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவான 'பரதேசி' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.

இவ்வாறாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்ற நடிகை வேதிகா தற்போது படங்களையும் தாண்டி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஒருவராக மாறியிருக்கின்றார். இவருக்கு குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மட்டும் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்கள் உள்ளனர். மேலும் இவர் சமீபத்தில் அரபிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடி மாலத்தீவில் இருந்து பிகினி படங்களளை வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த வேதிகா தற்போது கொரோனாவில் இருந்து முழுவதுமாக குணமாகி மாலைதீவிற்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு சென்று ஹெரிட்டன்ஸ் ஆரா விடுதியில் தங்கியிருக்கின்றார். அங்கிருந்தபடியே புதிய புகைப்படங்கள் பலவற்றை எடுத்து அப்புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனைப் பார்த்த வேதிகாவின் ரசிகர்கள் தமது லைக்ஸ் மற்றும் கமெண்டுகளை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement