• May 21 2024

ஹரிஸ் கல்யாணின் நூறு கோடி வானவில் திரைப்படத்திலிருந்து கிடைத்த லேட்டஸ்ட் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமானவர் தான் ஹரிஷ் கல்யாண். இவர் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது பிரபல இயக்குநர் சசி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நாயகியாக நடித்த சித்தி இட்னானி நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பானது தற்பொழுது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்த படத்திற்கு நூறு கோடி வானவில் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது . சித்துகுமார் இசையில் உருவாகிவரும் இந்த படத்தின் பாடல்கள் கம்போசிங் பணி முடிந்து விட்டதாகவும் சிங்கிள் பாடல் மிக விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் நாளை படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement