• Mar 26 2025

விடாமுயற்சி திரைப்பட கதையை வெளியிட்ட லைகா நிறுவனம்..!

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத்தின் இசையமைப்பில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இருப்பினும் சென்சார் பிரச்சனைகளின் காரணமாக வெளியீட்டு திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா விடாமுயற்சி படத்தின் கதையினை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.படம் வெளியீட்டிற்கு லைகா நிறுவனம் தற்போது சந்தித்துள்ள பொருளாதார நெருக்கடியும் காரணமாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

தற்போது இந்த நிறுவனம் தனது x தள பக்கத்தில் விடாமுயற்சி திரைப்பட போஸ்ட்டருடன் "கணவனின் சண்டை, வில்லன் ஆட்டம் - அஜீத் குமாரின் விடாமுயற்சி தடுக்க முடியாதது, அவரைப் போலவே VIDAAMUYARCHI தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நெட்ஃபிக்ஸ்க்கு வருகிறது! விடாமுயற்சி வெற்றி..விடாமுயற்சி திருவினையாக்கும்"என குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement