• Mar 29 2025

கிளாமர் காட்டுவது குறித்து " மதகஜராஜா " திரைப்பட நடிகை பேட்டி..!

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பொங்கலை முன்னிட்டு 12 வருடங்களின் பின் வெளியாகியுள்ள மதகஜராஜா திரைப்படம் தற்போது திரையரங்குகளில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.சுந்தர் சி இயக்கத்தில் விஷால்,வரலட்சுமி,சந்தானம் மற்றும் அஞ்சலி நடிப்பில் விஜய் ஆண்டனியின் இசையமைப்பில் வெளியாகியுள்ளது.


மற்றும் இப் படத்தில் மறைந்த நடிகர்கள் பலர் நடித்துள்ளமையினால் வரவேற்பு அதிகமாகியுள்ளதுடன் விஷால் படம் நீண்ட கால இடைவெளியின் பின்னர் வெளியாகியிருப்பதால் அதிகமான ரசிகர் கூட்டம் படம் பார்ப்பதற்காக திரண்டுள்ளது.


பொங்கல் ரேஸில் ஓடிக்கொண்டிருக்கும் இப் படத்தில் நடித்த நடிகை வரலட்சுமி சரத்குமார் கிளாமர் கட்டுவது தொடர்பில் பேட்டி ஒன்றின் போது சில கருத்துக்களை கூறியுள்ளார்.அதாவது "எந்தப் படத்தில்தான் கிளாமர் இல்லை. எல்லா படங்களிலும் ஹீரோயின்கள் இருக்கிறார்கள். சில படங்களில் அவர்களுக்கு நல்ல ரோல் இருக்கும். படங்களில் பாடல்களுக்கு நடனம் ஆடுவார்கள். கிளாமருக்காகத்தானே அந்தப் பாடலில் ஆடுவார்கள். அவர்கள் என்ன புர்ஹா அணிந்துகொண்டா ஆடுகிறார்கள். எந்த ஹீரோயினையும் கட்டாயப்படுத்தி கிளாமர் காட்ட சொல்வதில்லை. அவர்களுக்கே அது ஓகேயாக இருப்பதால்தான் கிளாமர் காண்பிக்கிறார்கள்" என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement