• Mar 19 2025

தமிழில் வெற்றி கண்ட மலையாள நடிகை...! – மாஸ் காட்டும் லேடி சூப்பர் ஸ்டார்!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'பிரேமலு' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மமிதா பைஜூ, தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றார். அழகும் திறமையும் இணைந்த அவருக்கு தமிழ்த் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது வெளியான தகவலின்படி, மமிதா பைஜூ அடுத்தடுத்து 5 முக்கிய தமிழ் படங்களில் நடிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். இந்த படங்களில் சிறந்த இயக்குநர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


குறிப்பாக  ஜனநாயகன், சூர்யா 46, இரண்டு வானம் மற்றும் பிரேமலு 2 போன்ற படங்களில் நடிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். அதிலும் மலையாள திரையுலகில் பெரும் ஹிட் பெற்ற 'பிரேமலு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகின்றது. இப்படம் மலையாளம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் வெளியாகும் என்பதால், மமிதா பைஜூக்கு இரு மொழிகளிலும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மமிதா பைஜூவுக்கு தமிழில் வரும் வாய்ப்புகள் அவரை விரைவாக முன்னணி நடிகையாக நிலைப்படுத்தும் எனப் பலரும் எதிர்பார்க்கின்றனர். இயற்கையான நடிப்புக்காக பெயர் பெற்ற மமிதா, தமிழ் சினிமாவில் அடுத்த ஹிட் ஹீரோயினியாக உருவாகியிருக்கிறார். 

தமிழ் சினிமாவில் மமிதா பைஜூ மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றார். அத்துடன் பிரபல இயக்குநர்கள் மற்றும் புதுமையான கதைகள் இவரது எதிர்காலப் படங்களுக்கு புதிய திருப்புமுனையாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Advertisement