• Mar 19 2025

திரையரங்குகளில் புரட்சியை ஏற்படுத்திய 'வருணன்'...!படக்குழுவைப் பாராட்டிய மக்கள்!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஜெயவேல்முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வருணன்' படத்தில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மற்றும் கேப்ரில்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ராதா ரவி, சரண்ராஜ், ஹரிப்பிரியா மற்றும் மகேஷ்வரி எனப் பலரும் நடித்துள்ளனர். இப்படம் தண்ணீரை வியாபாரமாக்கும் மனிதர்களின் வாழ்வியல் பின்னணியை மையமாகக் கொண்டு  இயக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜபுரம் பகுதியில் ராதாரவியும், சரண்ராஜும் தனித்தனியாக தண்ணீர் கேன் வியாபாரம் செய்கின்றனர். தண்ணீரை வியாபாரமாக்குவது மனிதர்களை யுத்தத்துக்கு தள்ளி விடும் என்ற கருவை வைத்து சாதாரண மனிதர்களின் வாழ்வியல் பின்னணிக் காட்சிகளை விறுவிறுப்பாக இயக்கியுள்ளார் ஜெயவேல் முருகன்.


'வருணன்' படம் சாதாரணமான வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் முக்கியமான சமூக பிரச்சனைகளை வெளிக்கொணடு வந்திருக்கிறது. திரையரங்கில் பார்ப்பதற்கு இது ஒரு ஆழமான பார்வையை தரும் திரைப்படமாக இருப்பதாக விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

அத்துடன் 'வருணன்' படம் மனித உறவுகள் மற்றும் அதிகாரத்தின் விளைவுகள் ஆகியவற்றை அழுத்தமாக பேசும் ஒரு சமூக பொழுதுபோக்கு திரைப்படம் என்றும் கூறியுள்ளனர். மேலும் இதனை அனைவரும் திரையரங்குகளில் வந்து கண்டிப்பாக பார்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement