தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னனாக விளங்கியவரே கவுண்டமணி. இவர் அதிகளவான படங்களில் செந்திலுடன் இணைந்து நகைச்சுவையாக நடித்துள்ளார். குறித்த காலப்பகுதி வரை நகைச்சுவையில் இவர்களை அடிக்க எவரும் இல்லை என்றே கூறலாம்.
அந்தவகையில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்களாக சின்னக்கவுண்டர் , கரகாட்டக்காரன் , முறைமாமன் எனப் பல படங்கள் உள்ளன. இதேவேளை கவுண்டமணி சில படங்களில் தானே ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
அவ்வாறே சமீபத்தில் தான் நடித்த " ஒத்த ஓட்டு முத்தையா " படத்தின் வெளியீட்டு விழாவின் போது அவர் நிறைய காலத்துக்கு பிறகு மீண்டும் நக்கலாக கதைத்துள்ளார். அதனைப் பார்க்கும் போது அவருக்கு வயது போனாலும் அவரது நக்கல் சற்றும் குறையவில்லை என்பது தெரியவருகின்றது.
அதில் கவுண்டமணி " படத்தை இயக்கிய இயக்குநருக்கு நன்றியை தெரிவித்ததுடன் ஒத்த ஓட்டு முத்தையா படத்தை அனைவரும் பார்த்துவிட்டு அதனை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள் " என நக்கலாக கூறினார். அத்துடன் இந்தப்படம் எல்லாப் பெரிய படங்களையும் தோற்கடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
Listen News!