இயக்குநர் மகிழ் திருமேனி தயாரிப்பில் உருவாகிய படமே விடாமுயற்சி. இந்தப் படத்தில் திரிஷா , அஜித் ,ரெஜினா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். அத்துடன் இந்த படத்தினைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
அந்த வகையில் படக்குழு பிப்ரவரி 6 ம் திகதி படத்தினை வெளியிடப்போவதாக கூறியிருந்தது. எனவே பல ரசிகர்களும் படத்தை எதிர்பார்த்திருந்த போது அவர்களுக்கு எல்லாம் அதிர்ச்சி கொடுக்கின்ற வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
விடாமுயற்சி படத்தினை லைக்கா நிறுவனம் வெளியிடப்போவதாக கூறியிருந்தது. தற்போது பரமெளன்ட் பிக்சர்ஸ் 13 கோடி பணத்தை லைகா நிறுவனம் கட்டினால் தான் படத்தை ரிலீஸ் செய்து கொள்வதற்கான NOC ஐ கொடுக்கும் என தெரிவித்துள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கொண்டதுடன் படம் ரிலீஸ் ஆகுமா இல்லையா என்ற கேள்வியும் அவர்களுக்கு எழுந்துள்ளது.
Listen News!