• Oct 04 2024

கூலி முடிய கைதி 2 தான்... அப்டேட் கொடுத்த லோகேஷ்... சம்பவம் இஸ் லோடிங்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜின் திரையுலகில் வந்த சில வருடங்களிலேயே கமல், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களை வைத்து மாஸ்டர், விக்ரம், லியோ, கைதி-1 படங்களை இயக்கினார். தற்போது நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து 'கூலி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.


கடந்த 2019-ம் ஆண்டில் நடிகர் கார்த்தியை வைத்து 'கைதி' எனும் படத்தை லோகேஷ் இயக்கிருந்தார். இந்த படம் வெளிவந்த போது கைதி-2 ம் பாகம் உருவாகும் என அறிவித்தனர். ஆனால் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து உச்ச நடிகர்கள் படம் இயக்குவதில் பிசியாக இருந்ததால் கைதி-2 படம் உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் அடுத்ததாக பாலிவுட் நடிகர் அமீர் கானை வைத்து 'பான் இந்தியா' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் லோகேஷ் கனகராஜ் கூலி படம் முடிவடைந்த பிறகு கைதி 2-ம் பாகத்தினை இயக்குவார் என்ற நல்ல செய்தி வெளியாகி உள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.  

Advertisement

Advertisement