• Sep 28 2025

தம்பி புதுசா அரசியலுக்கு வந்தால்.. இப்டியா கதைக்கிறது.? விஜய் மீது கேள்வி எழுப்பிய குஷ்பு!

subiththira / 4 days ago

Advertisement

Listen News!

தமிழ் திரைப்படத் துறையின் முன்னணி நடிகர் விஜய்யின் அரசியல் அறிமுகத்துக்குப் பிறகு, பல்வேறு பிரச்சனைகள் பற்றிய தனது கருத்துகளை தெளிவாக தெரிவித்து வருகிறார். குறிப்பாக, மீனவர் பிரச்சனை குறித்த அவரது சமீபத்திய விமர்சனங்கள், தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.


ஆனால் இவ்வாறு தனக்கு தேவையான புள்ளிவிவரங்கள் மற்றும் முழுமையான தகவல்கள் இல்லாமல் அரசியல் விமர்சனங்களைச் செய்யும் விஜய்க்கு, தற்போது பாஜக நிர்வாகி மற்றும் நடிகை குஷ்பூ  சுந்தர் திட்டவட்டமான பதிலைத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், விஜய், தமிழக மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து பேசினார். இலங்கை கடற்படையால் தமக்கு ஏற்படும் தாக்கங்கள், கைது செய்யப்படுவது, கடல் எல்லைகளில் பாதுகாப்பு இல்லாமை உள்ளிட்ட விஷயங்களை அவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டார்.


இந்த நிலையில், பாஜக தேசிய பெண்கள் அணியின் முக்கிய உறுப்பினரான குஷ்பூ, விஜய்க்கு பதிலளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், "தம்பி புதுசா அரசியலுக்கு வந்திருக்கிறார். நல்ல விஷயம்தான். ஆனால், அரசியலுக்கு வந்தவுடன் ஒரேடியாக பேசக்கூடாது. எதையும் முழுமையாகத் தெரிஞ்சுகிட்டுப் பேசணும்." என்று கூறியுள்ளார். 

Advertisement

Advertisement