• Jan 15 2026

விக்கி – கத்ரீனா வீட்டில் விரைவில் புதிய வரவு... இன்ஸ்டா பதிவால் குஷியில் ரசிகர்கள்..!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரைப்பட உலகில் மக்கள் மனங்களை வசீகரித்த தம்பதியான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல், தற்போது தங்களது வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியான தருணத்தைச் சந்தித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக ரசிகர்களால் விரும்பப்படும் இந்த ஜோடி, இன்று தங்களது மகிழ்ச்சியான செய்தியை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளனர்.


செப்டம்பர் 23, 2025 காலை, கத்ரீனா மற்றும் விக்கி, தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒரே நேரத்தில் ஒரு இனிமையான புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பை பகிர்ந்தனர். அந்த புகைப்படத்தில், இருவரும் கர்ப்பமாக இருப்பதனை வெளிப்படுத்தும் வகையில் போட்டோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர். 


இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, அதற்கு லட்சக்கணக்கான லைக், வாழ்த்துகள் மற்றும் ஷேர்கள் குவிந்தன. பாலிவுட் திரைத்துறையினரும், ரசிகர்களும், பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement