தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக அறியப்படுவர் அசோக் செல்வன். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில், நடிகர் அருண் பாண்டியனின் மூன்றாவது மகளான நடிகை கீர்த்தி பாண்டியனை ஆசோக் செல்வன் அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமணத்துக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.
மேலும் திருமணத்திற்குப் பின்னரும் அசோக் செல்வன் தன்து கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்த நிலையில்இவர் இன்றைய தினம் தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.
இதனால் கீர்த்தி பாண்டியன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹஸ்பன்ட் என்று புகைப்படம் வெளியிட்டு தனது வாழ்த்துக்களைத்தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!