• Jan 18 2025

மங்காத்தா திரைப்படம் போல தான் தளபதி 68 இருக்குமா?- யுவன் சங்கர் ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும் படமானது வணிக ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றதாகவும் 560 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துவிட்டதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதற்கான சக்சஸ் மீட்டும் அண்மையில் பிரமாண்டமாக நடந்தது.

அதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்தின் பூஜை வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.


 விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி அமரன், அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி செளதரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 90களில் பிரபலமாக இருந்த பிரசாந்த் பல வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுப்பதால் அவரது ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பயங்கரமாக எழுந்திருக்கிறது

முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் இரண்டாம்கட்டபடப்பிடிப்பு தாய்லாந்தில் துவங்கியுள்ளது. லியோ படத்தின் வெற்றி விழாவை முடித்துவிட்டு நடிகர் விஜய்யும் தாய்லாந்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.


இந்நிலையில், சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிடம் மங்காத்தா பின்னணி இசை போல், தளபதி 68 எதிர்பார்க்கலாமா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு 'கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்' என பதில் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement