• Dec 03 2024

திருமண பந்தத்தில் இணைந்த கார்த்திகை தீபம் சீரியல் நடிகை- ரசிகர்களிடமிருந்து குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


ஷு தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கிய ஒரு சில நாட்களிலே ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக கார்த்திக் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். 

ஏற்கனவே செம்பருத்தி சீரியல் மூலமாக ஷுதமிழ் ரசிகர்களை கட்டி இழுத்து வைத்திருந்த இவர் ஒரு சில வருடங்களாக சீரியலில் இருந்து விலகி இருந்து மீண்டும் இந்த சீரியலில் அறிமுகம் ஆகி இருக்கிறார். இதனாலே இவருடைய சீரியல் ரசிகர்கள் இந்த சீரியலுக்கு அமோகமாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். 


இந்த சீரியலில் கதாநாயகியாக ஆர்த்திகா என்பவர் நடித்து வருகின்றார். இவருக்கு இன்றைய தினம் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement