• May 16 2026

அடுத்தடுத்து மாஸான இயக்குநர்களுடன் கைகோர்க்கும் கவின்.! வெளியானது புதிய அப்டேட்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக திகழும் கவின் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. தற்போது, கவின் நடிக்க உள்ள புதிய படத்தை அறிமுக இயக்குநர் பரவீன் பரமசிவம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் திரைப்பட வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.


இதேவேளை, கவின் தற்போது நயன்தாரா உடன் ‘ஹாய்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் கவினும் முதன்மை கதாபாத்திரங்களில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், இந்த படத்தில் பிரபு, பாக்யராஜ், ராதிகா சரத்குமார், கருணாஸ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை விஷ்ணு எடவன் இயக்கி வருகிறார். இவர், பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் அப்டேட்கள் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement

Advertisement