• Jun 06 2026

மனதளவில் ரொம்பவே உடைந்து போயிருக்கிறேன்! - செய்திகளால் ஏற்பட்ட ரணம்.. சாய் பல்லவி

shali / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் தனித்துவமான நடிப்பாலும் இயல்பான குணத்தாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள சாய் பல்லவி, சமீபத்திய பேட்டியில் பகிர்ந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

அந்த பேட்டியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தாம் அளித்த ஒரு பேட்டி தவறாக சித்தரிக்கப்பட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். “நான் மலையாளி அல்ல, தமிழ்ப் பெண் என கூறியதை முற்றிலும் தவறாக புரிந்து கொண்டு, நான் மலையாளி என்று அழைத்ததால் கோபமடைந்தேன் என பொய்யான செய்திகளை பரப்பினர். உண்மையில் நான் அப்படியான எந்த கருத்தையும் கூறவில்லை,” என அவர் தெளிவுபடுத்தினார்.


மேலும், “நான்கு ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியை இப்போது மாற்றி அமைத்து வெளியிட்டதை பார்த்ததும் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். நான் சொல்லாத விஷயங்களை சொன்னதாக காட்டி என் மீது குற்றம் சுமத்தியது எனக்கு மிகுந்த மனவலியை ஏற்படுத்தியது,” எனவும் தெரிவித்துள்ளார்.

செய்திகளை சரிபார்க்காமல் பரப்புவது எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாக இதை பலரும் குறிப்பிடுகின்றனர். சாய் பல்லவியின் இந்த விளக்கம், உண்மை தகவல்களைப் பகிர வேண்டிய அவசியத்தை நினைவூட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement