• Jun 16 2026

ரசிகர்களின் அன்பு கிடைக்காவிட்டால் இதுதான் நிகழ்ந்திருக்கும்? கார்த்தி

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் கார்த்தி தனது பிறந்தநாளுக்காக ரசிகர்கள் மற்றும் சகோதர, சகோதரிகள் அளித்த அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். அதாவது, “எனக்கு தொடர்ந்து அளவற்ற அன்பையும் ஆசிகளையும் வழங்கி வரும் என் அன்பு சகோதர, சகோதரிகளுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. 


உங்கள் இதயங்களை வெல்வதற்கும், உங்களை எப்போதும் பெருமைப்படுத்துவதற்கும் மட்டுமே நான் தொடர்ந்து உழைத்து வருகிறேன். எனது பிறந்தநாளை பல்வேறு நற்பணிகள், சமூக சேவைகள் மற்றும் நல்ல செயல்கள் மூலம் கொண்டாடிய விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்துள்ளது,” என அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நடிகர் கார்த்தி தனது பிறந்தநாளை ரசிகர்கள் மற்றும் திரைத்துறை நண்பர்களின் வாழ்த்துகளுடன் கொண்டாடினார். சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆயிரக்கணக்கான வாழ்த்துகள் குவிந்த நிலையில், பல ரசிகர் மன்றங்கள் ரத்ததான முகாம்கள் போன்ற நற்பணிகளை மேற்கொண்டு பிறந்தநாளை சமூக சேவையாக மாற்றியிருந்தனர். இதனால் கார்த்தி தனது ரசிகர்களின் இந்த அன்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டியுள்ளார்.

மேலும், ரசிகர்களின் இந்த அன்பு தனக்கு மேலும் பொறுப்பை அதிகரிப்பதாகவும், நல்ல கதைகள் மற்றும் தரமான படைப்புகளின் மூலம் அவர்களை தொடர்ந்து மகிழ்விக்க வேண்டும் என்ற உறுதியை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திரைத்துறையில் தனது பயணத்தில் எப்போதும் ரசிகர்களின் ஆதரவே தனது மிகப்பெரிய பலமாக இருப்பதாகவும், அவர்களின் அன்புக்கு தகுந்த பதிலளிக்க தொடர்ந்து உழைப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement