• Jan 19 2025

சண்டை பயிற்சியாளரின் உடலுக்கு வாடிய முகத்தோடு அஞ்சலி செலுத்திய கார்த்தி! போட்டோஸ்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் சர்தார். இந்த படத்தில் கார்த்தி அப்பா, மகன் என இரண்டு கேரக்டரில் நடித்திருந்தார். 

இதில் ராசி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உட்பட பலர் நடித்திருந்ததோடு இந்த படம் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரை வசூலில் வெற்றி பெற்றிருந்தது.

சர்தார் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம் எடுப்பதற்கான பணிகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி கடந்த இரு நாட்களுக்கு முன்னர் அதில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது.


இதன்போது எதிர்பாராத விதமாக 20 அடி உயரத்திலிருந்து சண்டை பயிற்சியாளர் ஆன ஏழுமலை தவறி விழுந்து உயிரிழந்து உள்ளார். இந்த சம்பவம் தமிழ்த் திரை உலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், தற்போது நடிகர் கார்த்தி உயிரிழந்த சண்டை பயிற்சியாளர்  ஏழுமலை உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.



Advertisement

Advertisement