• Jan 20 2025

கங்குவா ஒரு குழந்தை.. அது பிறக்கும் போது பண்டிகையா கொண்டாடுவீங்க! சூர்யா எமோஷனல் ஸ்பீச்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான உலகநாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் இதன் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் அதன் தோல்விக்கு பிறகு வெற்றி படம் ஒன்றை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் காணப்படுகின்றது. அதனால் தான் ரஜினியின் வேட்டையன் படத்திற்கான அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. அதேபோல சூர்யாவின் கங்குவா  திரைப்படமும் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாவதாக அறிவித்ததில் இருந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது.

எனினும் ரஜினியின் வேட்டையன் படத்திற்கு கங்குவா போட்டியா என கேள்வி எழுப்பப் பட்டது. இதன் தயாரிப்பாளர் ரஜினி அதைப்பற்றி என்ன நினைப்பார் என தனது கருத்துக்களை பகிர்ந்து இருந்தார்.

நேற்றைய தினம் வேட்டையன் படத்திற்காக ரஜினிகாந்த் டப்பிங் பணிகளை ஆரம்பித்த காட்சிகளை லைக்கா நிறுவனம் ஸ்பெஷல் வீடியோவாக வெளியிட்டு இருந்தார்கள். மேலும் ஜெயிலர் படத்திற்கு பிறகு பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.


இந்த நிலையில், கங்குவா படத்துடன் வேட்டையின் பட ரிலீஸ் ஆவது பற்றி சூர்யா கூறுகையில், கங்குவா படம் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் கடின உழைப்பினால் உருவானது. இந்த படம் அக்டோபர் 10-ம் தேதி ரிலீஸ் செய்ய பிளான் பண்ணினோம். ஆனால் அன்றைய தினத்தில் மூத்தவர், நான் பிறக்கும் போது சினிமாவில் நடிக்க தொடங்கியவர், 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆகின்றது. எனவே சூப்பர் ஸ்டாருக்கு மரியாதை செய்வதே சரியாக இருக்கும்.

கங்குவா  ஒரு குழந்தை அது எப்போது ரிலீஸ் ஆகுதோ அப்போதுதான் அதன் பிறந்தநாள். அன்றைய தினத்தை பண்டிகையாக நீங்க கொண்டாடுவீங்கன்னு நம்புகின்றேன். நீங்கள் என்னுடன் இருப்பீர்கள் என நினைக்கின்றேன் என சூர்யா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement