• Sep 10 2024

"'கங்குவா பார்ட் 2' இற்கு எந்த போட்டியும் இருக்காது" -தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

Thisnugan / 1 month ago

Advertisement

Listen News!

ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன மெகா பட்ஜெட் திரைப்படங்களான 'தங்கலான்' மற்றும் 'கங்குவா' திரைப்படங்கள். 2019 ஆம் தொடங்கப்பட்டு கொரானா பேரிடர் காரணமாக கைவிடப்பட்டு மீண்டும் 2022 இல் ஆரம்பித்த சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.

Kanguva - Wikipedia

நடிப்பு,இசை,காட்சிகள் என அத்தனையும் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லா மிரட்டும் அளவில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்திலிருந்து அண்மையில் வெளியான 'பஃயர்' பாடல் யூடியூப்பில் இதுவரை 17 மில்லியன் பார்வைகளை கடந்து படத்திற்கான பெரும் ஆரம்பத்தை அறிவித்திருக்கிறது.


கங்குவா திரைப்படம் வருகிற அக்டோபர் 10 திகதி உலகளவில் வெளியாகவுள்ள நிலையில் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் திரைப்படமும் அதே நாளில் வெளியாவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.இது தொடர்பாக அண்மையில் நேர்காணல் ஒன்றில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு "கங்குவா முதல் பாகத்திற்கு யார் வேணாலும் கூட ரிலிஸ் பண்ணலாம் ஆனா கங்குவா 2 க்கு போட்டியே இருக்காது" என நம்பிக்கையாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement