• Jan 19 2025

’குக் வித் கோமாளி’ ஷப்னம் செல்போன் மிஸ்ஸிங்.. திருடியவன் செம்ம விவரம் போல..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

குக் வித்  கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட ஷப்னம் விலையுயர்ந்த செல்போன் தொலைந்து விட்டதாகவும் திருடியவன் மிக விவரமாக இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாரி உள்பட சில சீரியல்களிலும் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட ஷப்னம் சமீபத்தில் சென்னை பெசன்ட் நகர் பீச்சுக்கு தனது தோழிகளுடன் சென்று இருந்தபோது அவரது விலை உயர்ந்த செல்போன் தொலைந்து விட்டதாக தெரிகிறது.

இந்த செல்போனை அவர் வாங்கி சில மாதங்கள் தான் ஆகிறது என்றும் இன்னும் இஎம்ஐ தவணை கூட முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. தன்னுடைய வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு விலையுயர்ந்த செல்போன் வாங்கி இருந்த நிலையில் அதற்குள் தொலைந்து விட்டது என்று அவர் மனம் வருந்தி இருப்பதாகவும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

 இந்த நிலையில் செல்போனின் அனைத்து தகவல்களையும் திரட்டிய காவல்துறையினர் செல்போனை திருடியவன் ஆன் செய்தால் உடனே இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் செல்போன் திருடியவன் மிகவும் விவரமானவன் என்று தெரிகிறது. மொபைல் போனை திருடி ஒரு வாரத்துக்கு மேலாகியும் இன்னும் மொபைலை ஆன் செய்யாமலே வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

செல்போனை பார்ட் பார்ட்டாக பிரித்து விற்று விட்டால் கடைசி வரை கண்டுபிடிக்க முடியாது என்று அவரது நட்பு வட்டாரங்கள் கூறிய நிலையில் ஷப்னம் வருத்தத்தில் இருப்பதாகவும் செல்போனுக்கு இன்சூரன்ஸ் கூட செய்யவில்லை என்பதால் அவர் தொலைந்த செல்போனுக்கும் இஎம்ஐ கட்ட வேண்டிய நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement