• Jul 14 2025

விஜய் குறித்து எழுந்த கேள்விக்கு பதில் கூறிய கமல்...!ஆச்சரியத்தில் பத்திரிகையாளர்கள்...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் கமல் ஹாசன். இவர் தனது ரசிகர்களால் உலக நாயகன் என அழைக்கப்படுகின்றார். தற்போது "தக் லைஃப்" திரைப்படத்தின் புரொமோஷன் வேலைகள் பிசியாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் புரொமோஷன்  வேலையாக வெளிநாடு செல்லும் கமலிடம் , விஜய் குறித்து பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு கமல் அளித்த பதில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றது .


ஜூன்  5ஆம் திகதி திரையங்குகளில வெளியாக உள்ளன நிலையில் புரொமோஷன் வேலைகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக சிம்பு நடித்துள்ளார். மேலும் அபிராமி , த்ரிஷா என இரண்டு ஹீரோயினிகள் கமலுக்கு ஜோடியாக  நடித்துள்ளார்கள். இப் படத்திற்கு எ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.  முதன் முதலில் கமல் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நீண்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


இந்த நிலையில் புரொமோஷன் வேலையாக வெளி நாடு செல்லும் போது விமான நிலையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு சிறிது நேரம் இடம் பெற்றது. அதில் பத்திரிகையாளர் ஒருவர்" தொடர்ந்து தமிழகத்தில் அதிகமான கட்சிகள் ஆரம்பித்துள்ளார்கள்". இந்நிலையில் விஜய் தமிழக வெற்றி கழக கட்சி  பற்றி உங்கள் கருத்து என்ற கேள்விக்கு கமல் பதில் அளித்துள்ளார். அதாவது "நானே புதிய கட்சி அதனால் நானே விமர்சிக்க கூடாது" எனக் பதில் அளித்துள்ளார். 












Advertisement

Advertisement