• May 17 2025

" thugh life " திரைப்பட வெற்றி உறுதி..! சிம்புவிற்கு சூப்பர் பரிசளித்த கமல்காசன்

Mathumitha / 7 hours ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு ,கமல் ,திரிஷா நடித்துள்ள " thugh life " திரைப்படம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவின் பலத்த கூட்டணி இணையவுள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் புரொமோஷன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது.


இந்த நிலையில் Thugs Talk எனும் நிகழ்ச்சியில் சிம்பு ,கமல் ,திரிஷா ஆகியோர் கலந்து சிறப்பித்து இருந்தனர். இந்த நேர்காணலுக்கு சிம்பு k எனும் எழுத்து இருக்கும் சட்டையை அணிந்து சென்றுள்ளார். மேலும் அந்த சட்டையை கமல் சார் எனக்கு பரிசாக கொடுத்ததாக கூறியுள்ளார்.


மேலும் கமல் " மணி எப்பயுமே அஞ்சரை மணிக்கு சூட்டிங் வந்திடுவாரு அதனால் நான் அவரை மணிரத்னம் என சொல்றதில்லை அஞ்சரைமணின்னு தான் சொல்லுவேன் " என மிகவும் வேடிக்கையாக பேசி சிரித்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. 

Advertisement

Advertisement