பல கோடி ரசிகர்களை தன்வசமாக்கிய நடிகர் அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய "குட் பேட் அக்லி " திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் கார் ரேசிங்கிலும் ஈடுபாடு காட்டி வருகின்றார். துபாயில் இடம்பெற்ற 24 மணிநேர கார் பந்தயத்தில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை பிடித்து நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
இந்த நிலையில் இவரது அடுத்த படம் குறித்த எந்த வித அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை இதனால் "அஜித் சினிமாவை விட்டு விலகுகின்றார் என வதந்திகள்" வெளியாகியது. மேலும் இவர் தீவிரமாக கார் ரேசிங்கில் கவனம் செலுத்தி வருகின்றார்.
இதனால் " 2025 நவம்பரில் அடுத்த படம் நடிப்பேன் எனவும் அந்த படத்தை 2026 ஆம் ஆண்டு கோடையில் வெளியிட இருப்பதாகவும் ரேசிங் காலத்தில் படம் நடிக்காமல் கவனம் செலுத்துவதே சிறந்த வழி என்று நினைக்கிறேன்.2024 ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை 42 கிலோ எடையை குறைத்துள்ளேன்." எனவும் தெரிவித்துள்ளார்.
Listen News!