• May 17 2025

15 நாள் இடைவெளியில் தொடர் இறப்பு..! அதிர்ச்சியில் காந்தாரா 2 படக்குழு..

Mathumitha / 6 hours ago

Advertisement

Listen News!

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தார திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகின்றது. கன்னட மொழியில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் சூட்டிங் ஆரம்பித்த நாளில் இருந்து இன்றுவரை பல மர்மமான விடயங்கள் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. அதாவது சமீபத்தில் இந்த படத்தில் நடிக்க இருந்த நடிகர்  கபில் சௌபனிக்கா ஆற்றில் விழுந்து நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து துணை நடிகர் ஒருவர் திருமணம் ஒன்றிற்கு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


இது மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மூதூரில் படப்பிடிப்பு முடிந்து திரும்பிய 20 ஜூனியர் ஆர்டிஸ்ட் கொண்ட பஸ் விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. தொடர் மர்ம நிகழ்வுகள் காரணமாக படக்குழு பதற்றத்தில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் முக்கியமான செட் ஒன்றும் சீரற்ற காலநிலையினால் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement