• Oct 13 2026

மஞ்சும்மல் பாய்ஸ்'-க்கு சர்வதேச அங்கீகாரம்! ரஷ்யாவில் கினோபிராவோ திரைப்பட விழாவிற்கு தேர்வு!

shali / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மலையாள படமான 'மஞ்சும்மெல் பாய்ஸ்’ படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த ஜெயிலர் படத்தின் வசூலையே முறையடித்துள்ளது மஞ்சும்மெல் பாய்ஸ். கடந்த 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ்.


சிதம்பரம் என்பவர் இயற்றியுள்ள இந்த படம், கேரளாவில் மஞ்சுமெல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த போது, அதில் ஒருவர் மட்டும் குணா குகையில் சிக்கிக்கொள்ள, அவரை அவரது நண்பர்கள்  எப்படி மீட்டார்கள் என்பது தான் இப்படத்தின் கதை.


இன்றும் இந்த படத்தினை கொண்டாடித்தான் வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. ரஷ்யாவில் கினோபிராவோ திரைப்பட விழாவிற்கு ‘மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தேர்வாகியுள்ள நிலையில் நாளை மற்றும் அக்டோபர் ஒன்றாம் தேதி திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 


Advertisement

Advertisement