• Jun 27 2024

விஜய் இடத்தில் சிம்புவை உட்கார வைக்க கமல் திட்டமா? அரசியலுக்கும் உதவுவாரே..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியல்வாதியாக இருக்கும் நிலையில் அவருடைய சினிமா இடத்தை பிடிக்க பல நடிகர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக அடுத்த தளபதி நான் தான் என்று சிவகார்த்திகேயன் உள்பட சிலர் கனவு கண்டு கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசனின் திட்டமே வேறாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

கமல்ஹாசன் நடித்து வரும் ’தக்லைஃப்’ திரைப்படத்தில் சிம்பு என்ட்ரி ஆனதும் சிம்புவின் கேரக்டரை கூடுதலாக மெருகேற்ற சொன்னதாகவும் இந்த படத்தின் மூலம் சிம்பு ஒரு மாஸ் நடிகராக மாற வேண்டும் என்று கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதற்காக தான் கதையின் போக்கை மாற்றி சிம்புவின் கேரக்டருக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தின் மூலம் சிம்பு மிகப்பெரிய வெற்றி பெற்று விஜய் இடத்தை பிடிக்க வைக்க வேண்டும் என்று முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி கமல்ஹாசனின் அரசியல் வாழ்க்கைக்கும் சிம்பு உதவுவார் என்றும் ஒருவேளை கமல் மற்றும் விஜய் எதிரெதிர் அணியில் இருந்தால் சிம்பு கமல்ஹாசனுக்கு ஆதரவாக அரசியல் பேசுவார் என்றும் கூறப்படுகிறது.

சிம்பு ஏற்கனவே சமூக அக்கறை கொண்டவர் என்பதும் காவிரி நீர் பிரச்சினை உட்பட பல விஷயங்களில் அவர் சரியாக பேசியிருப்பதை பார்க்கும்போது எதிர்காலத்தில் அவர் கமலுடன் கைகோர்த்து அரசியலில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் விஜய் இன்னும் முழுநேர அரசியலுக்கு வராத நிலையில் அவரது அரசியல் எதிரியை தயார் படுத்தும் முயற்சியில் கமல்ஹாசன் இருப்பதாக கூறப்படுவது எந்த அளவுக்கு உண்மை என்பது போக போகத்தான் தெரியும்.

Advertisement

Advertisement