• Apr 27 2024

கமல்ஹாசன் கேரக்டரில் நடிக்கும் அசோக்செல்வன்.. 36 ஆண்டுகளுக்கு பின் ஒரு ரீமேக் படம்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்னர் கமல்ஹாசன் நடித்த சூப்பர் ஹிட் படம் ஒன்று ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும் அந்த படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் இயக்குனர் குறித்த தகவல் கசிந்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

கடந்த 1988 ஆம் ஆண்டு கமல்ஹாசன், அமலா நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் ’சத்யா’. இந்த படம் வெளியாகி 36 ஆண்டுகள் கழித்து தற்போது ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் கமல்ஹாசனின் கேரக்டரில் அசோக் செல்வன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடித்த ’போர்த்தொழில்’ என்ற படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.'



இந்த படம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கமல்ஹாசனிடம் இந்த படத்தை ரீமேக் செய்ய இயக்குநர் விக்னேஷ் ராஜா அனுமதி பெற்று விட்டதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன், அமலா, கிட்டி, ராஜேஷ் உட்பட பலர் நடித்த இந்த படம் 36 ஆண்டுகளுக்கு முன்பே 8 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் இந்த படம் மீண்டும் ரீமேக் செய்யப்பட இருப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement