• Jan 18 2025

இழுத்து மூடப்படுகிறதா ‘எதிர்நீச்சல்’ சீரியல்? நெகட்டிவ் விமர்சனங்களால் அதிர்ச்சி..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் ஒரு காலத்தில் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் தற்போது இந்த சீரியல் பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த தொடரின் கதைக்களம் ஆரம்பத்தில் ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்ட நிலையில் இந்த தொடருக்கு டிஆர்பியில்  முன்னணி இடம் கிடைத்தது. ஆனால் பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் உள்பட பல்வேறு விஷயங்கள் கண்டனத்திற்கு உள்ளான நிலையில் திடீரென ஜி மாரிமுத்து காலமானதையடுத்து குணசேகரன் கேரக்டருக்கு பொருத்தமான நபரை தேர்வு செய்ய முடியாமல் சீரியல் குழுவினர் திணறினர்.

இதனை அடுத்து ஒரு வழியாக வேல ராமமூர்த்தி தற்போது அந்த கேரக்டரில் நடித்து வந்தாலும் விறுவிறுப்பான கதைக்களம் இல்லை என்றும் அதனால் இந்த சீரியலை கூடிய சீக்கிரம் இழுத்து மூட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பழைய எதிர்நீச்சல் சீரியலை மிஸ் செய்வதாக பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நிலையில் சீரியல் குழுவினர் விரைவில் அதிரடி முடிவெடுத்து சீரியலை விறுவிறுப்பாக கொண்டு செல்லாவிட்டால் மூடுவிழா நடத்த சேனல் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement