உலகநாயகன் கமல்ஹாசன் மீதான ’உத்தம வில்லன்’ பஞ்சாயத்து இன்று பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் இன்றைய பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவான ’உத்தம வில்லன்’ என்ற திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி தயாரித்த நிலையில் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது.
இந்த நஷ்டத்தில் இருந்து அவர் மீண்டு வர முடியாத நிலையில் இருந்த போது தான் கமல்ஹாசன் மீண்டும் ஒரு படம் நடித்து தருகிறேன் என்று லிங்குசாமிக்கு வாக்குறுதி அளித்ததாகவும் எழுத்துப்பூர்வமாக அதை எழுதி கொடுத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் ’உத்தமவில்லன்’ வெளியாகி ஒன்பது ஆண்டுகள் ஆகிய பின்னும் இன்னும் கமல்ஹாசன் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதை அடுத்து சமீபத்தில் லிங்குசாமி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் குறித்து ஒரு குழு அமைத்து கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் கமல்ஹாசன் இந்த பேச்சுவார்த்தைக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசனின் இப்போதைய சம்பளம் 100 முதல் 150 கோடி ரூபாய் என்று இருக்கும் நிலையில் லிங்குசாமி மொத்தம் 30 கோடியில் படத்தை முடிக்க வேண்டும் என்று கூறி வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை எந்த அளவுக்கு சுமுகமாக முடியும் என்ற கேள்வி கூறி எழுந்துள்ளது. இருப்பினும் கமல்ஹாசன் மனது வைத்தால் லிங்குசாமி நஷ்டத்தை சரி செய்து விடலாம் என்பதால் அவர் இன்றைய பேச்சுவார்த்தையில் குறைந்த சம்பளத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!