சமீபத்தில் வெளியான ’பிரேமலு’ என்ற மலையாள திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், 2கே காதலை மிகவும் அழகாக இயக்குனர் சொல்லி இருந்த நிலையில் இந்த படம் இளைஞர்களால் கொண்டாடப்பட்டது என்பது தெரிந்தது.
மேலும் ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ போல இந்த படம் நேரடியாக மலையாளத்தில் வெளியாகாமல் தமிழில் டப் செய்து வெளியானதால் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் ரசித்தனர் என்பதும் திரையரங்குகள் போலவே ஓடிடியிலும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் நஸ்லென் மற்றும் மமிதா ஆகிய இருவரது கெமிஸ்ட்ரி சூப்பராக இருந்தது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்த நிலையில் இந்த படத்தின் வெற்றி விழாவில் நஸ்லென் நண்பராகவும் இருவரது காதலுக்கு உதவி செய்பவராகவும் நடித்த அமல் டேவிட் கேரக்டரில் நடித்த சங்கீத் பிரதாப் உடன் மமிதா நெருக்கமாக இருந்ததை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
’பிரேமலு’ படத்தில் நஸ்லென் ஜோடியாக மமிதா நடித்த நிலையில் நிஜத்தில் சங்கீத்தை அவர் காதலிக்கிறாரா? இந்த கெமிஸ்ட்ரியும் நன்றாக தான் இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் அளித்த நிலையில் சமீபத்தில் இது குறித்து சங்கீத் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறிய போது ’நானும் மமிதாவும் காதலிப்பதாக வெளியான மீம்ஸ்களை பார்த்தேன், ஆனால் உண்மையில் எங்களுக்கு இடையே எந்த காதலும் இல்லை, இன்னும் சொல்ல போனால் மமீதா எனக்கு சொந்த தங்கை போல, படப்பிடிப்பில் ஜாலியாக பழகியதால் அது வைரலாகிஆகிவிட்டது என்று கூறியுள்ளார். சங்கீத் பிரதாப்பின் இந்த பேட்டி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
Listen News!