• Jan 19 2025

பாண்டியன் தலையில் மிளகாய் அரைத்த தங்கமயில் அம்மா.. இப்படியெல்லாம் சடங்கு உண்டா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இன்றைய எபிசோடில் திருமணத்திற்கு புடவை, வேட்டி எடுக்க பாண்டியன் குடும்பத்தினர் மற்றும் தங்கமயில் குடும்பத்தினர் கடைக்கு சென்றனர் என்றும் அங்கு நடந்த காமெடி காட்சிகள் மற்றும் அதனை அடுத்து சாப்பிட ஹோட்டலுக்கு சென்றபோது நடந்த காட்சிகள் ஒளிபரப்பாகி உள்ளன.

முகூர்த்த சேலை மட்டுமே ஒரு லட்சத்திற்கும் அதிகமாக எடுத்து அதிக செலவு இழுத்துவிட்ட தங்கமயில் அம்மா பாக்கியம், அதன் பிறகு ரிசப்ஷனுக்கு சேலை, ஆடம்பரமான பிளவுஸ் என பாண்டியன் தலையில் கிட்டத்தட்ட மிளகாய் அரைத்து விட்டார் என்றே கூறலாம். பாண்டியனின் இந்தக் கட்டான சூழ்நிலையை புரிந்து கொண்ட மீனா அதிக விலை உள்ள புடவைகள் எல்லாம் நன்றாக இல்லை என்று கூறி குறைந்த வேலையில் சேலையை எடுக்க வைத்த நிலையில் மீனா மீது தங்கமயில் மற்றும் அவரது அம்மா பாக்கியம் ஆகிய இருவரும் கடுப்பில் இருந்தனர்.

மேலும் பாண்டியனின் பரிதாபமான நிலையை புரிந்து கொண்ட மீனா மற்றும் மற்ற குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கான புடவைகளை குறைந்த விலையில் எடுத்தனர். இருப்பினும் மொத்தமாக பில் மூன்று லட்சத்தை தாண்டியதை அடுத்து பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார்.



ஒரு வழியாக திருமணத்திற்கான உடைகள் எடுத்த நிம்மதியில் இருந்த பாண்டியன் அடுத்ததாக சாப்பிட செல்லலாம் என்று கூறினார். அப்போது உடை எடுத்தவுடன் சாப்பாடு வாங்கி தரவேண்டியது தான் சடங்கு என புதிது புதிதாக பாக்கியம் சடங்கு என கூறி வெறுப்பேற்றினார். இப்படியெல்லாமா சடங்கு உண்டு என பாண்டியன் - கோமதி அதிர்ச்சி அடைந்த போது தங்கமயில் அப்பா எனக்கு தெரிந்த ஒரு ஹோட்டல் இருக்கிறது, அங்கு நன்றாக இருக்கும் வாருங்கள் என்று ஆடம்பரமான ஹோட்டலுக்கு அழைத்து செல்ல அங்கும் பாண்டியனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு உள்ள மெனு கார்டை பார்த்து பாண்டியன் அதிர்ச்சி அடைய, போதாகுறைக்கு தங்கமயில் 11 பிரியாணி, 11 ப்ரைட் ரைஸ், 11 மட்டன் சுக்கா என்று ஆர்டரை குவித்தார். பாண்டியன் அதிர்ச்சி அடைந்த நிலையில் அவரை புரிந்து கொண்ட மீனா எல்லா ஆர்டரையும் கேன்சல் செய்து சிம்பிளாக ஆர்டர் செய்தார். அப்படி இருந்தும் பணம் எக்கச்சக்கமாக வந்த நிலையில் வீட்டிற்கு வந்து பாண்டியன் புலம்பி  கொண்டிருந்தார். பட்ஜெட்டை விட நான்கு மடங்கு செலவு ஆகிவிட்டது, இப்பவே மூன்று லட்சத்திற்கும் அதிகமாக செலவாகிவிட்டது என்று பாண்டியன் புலம்பியதோடு இன்றைய எபிசோடு முடிவடைந்துள்ளது.

Advertisement

Advertisement