தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் தான் கமல்ஹாசன்80களில் முன்னணி ஹீரோவாக மாறினார். ரஜினிக்கு போட்டியாக இருந்த ஒரே நடிகர் கமல் மட்டுமே. இப்போது விஜய் – அஜித் போல அப்போது ரஜினி – கமல் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வார்கள்.
ரஜினி கமர்ஷியல் மசாலா படங்களில் நடித்தால் கமல் நல்ல கதையம்சம் கொண்ட நாயகன், தேவர் மகன், குணா, மகாநதி, விருமாண்டி, விஸ்வரூபம், தசாவதாரம் ஆகிய படங்களில் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகராக நிலை நிறுத்திக்கொண்டார். இறுதியாக லோகேஷ் கனகராஜுடன் இணைந்து அவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மெகா ஹிட் அடித்துள்ளது.
அடுத்து மணிரத்தினத்துடன் ‘தக் லைப்’ என்கிற படத்திலும், ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். மேலும், ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
ஆனால், இதே கமல்ஹாசன் 7 வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். எம்.ஜி.ஆருடன் அவர் நடித்த ஆனந்த ஜோதி 1963ம் வருடம் வெளியானது. கமல் சிறுவனாக நடித்தது இதுதான் கடைசிப்படம். அதன்பின் 1970ம் வருடம் வெளிவந்த மன்னவன் என்கிற படத்தில் ‘விசிலடிச்சான் குஞ்சுகளா’ என்கிற படத்தில் டீன் ஏஜ் வாலிபனாக அறிமுகமானார். இடைப்பட்ட 7 வருடம் அவர் எந்த சினிமாவிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!