• Jan 19 2025

கிளியரா தெரிந்த கலிவரதன் ஃபேஸ்! ஆதாரத்துடன் பிடிபடும் அர்ஜுன்! தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அடுத்து நிகழப்போவது?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில்  ஒன்றுதான் தமிழும்  சரஸ்வதியும்.

தற்போது ஜெயிலில் இருக்கும் சரஸ்வதியை விடுவிக்க, தமிழ் ஆதாரத்தை தேடி அழைக்கிறார். எனவே, தமிழும்  சரஸ்வதியும் சீரியலில் இனி என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்.

அதன்படி, மேக்னா உயிரிழந்த இடத்தில் ஏதாவது சிசிடிவி கேமரா ஃபோட்டோஸ் கிடைக்குதா என்று தமிழ் தேடி பார்க்கிறாரு. 

அப்பதான் ஒரு இடத்துல சிசிடிவி கேமரா ஆன்ல இருப்பதை பார்த்து விட்டு, அந்த வீட்டுக்கு போய் சம்பவம் தொடர்பில் விசாரிக்கிறார்.

அதன்படி, இந்த இடத்துல ஒரு சம்பவம் நடந்திருக்கு.. அந்த வீடியோவை கொஞ்சம் எங்களுக்கு ப்ளே பண்ணி காமிச்சீங்கன்னா ஏதாவது ஆதாரம் கிடைக்கும். ஒரு தடவை பிளே பண்ணி காமிக்க முடியுமா அப்படின்னு கேட்க, அதுக்கு வீட்டுக்காரங்க முதல்ல முடியாது அப்படின்னு சொன்னாலும்,  அதுக்கப்புறம் அவங்களோட குடும்ப நிலைமையை, சரஸ்வதியின்  நிலைமைய பற்றி தமிழ் சொன்னதுக்கு அப்புறமா அவங்களும் கொஞ்சம் மனசு இறங்கி வீடியோவை ப்ளே பண்ணி காட்டுகிறார்கள்.


அதில், அந்த இடத்துக்கு யார் யார் வந்திருக்காங்க, எப்போ மேக்னா வந்தாங்க, என்ன என்ன நடந்துச்சு, அப்படிங்கற டீடைல் மொதக்கொண்டு எல்லாமே சிசிடிவி கேமரால தெரிகிறது. அதிலும்  மேக்னா மாமாட ஃபேஸ் முதல் தெளிவாக கிளியரா தெரிகிறது.

அத்துடன், சரஸ்வதி மேக்னாவ காப்பாத்துறதுக்கு போராடின விஷயத்தையும் பார்த்துட்டு தமிழ் கண் கலங்குகிறார். அந்த சிசிடிவி புட்டேஜ்ஜ ஒரு காபி எடுத்துக்கிட்டு போலீஸ்க்கு காட்டணும் அப்படின்னு தமிழ் வேகமாக போறாங்க.

ஆனா அந்த நேரத்துல தமிழுக்கு பின்னாடியே ஒரு ரவுடி கூட்டம் பாலோ பண்ணிக்கிட்டு போக, அதுல  அர்ஜுனோட ஆளு ஒருத்தன் ஆதாரம் பற்றிய விஷயங்களை அர்ஜூன் கிட்ட சொல்றாங்க.

அதற்கு, அர்ஜுன் அந்த ஆதாரம் போலீஸ் கையில் சேரக்கூடாது, அந்த ஆதாரத்தை தேடி எடுத்துடு, அப்படின்னு சொல்றாங்க.. மேலும், அவனோட அடியார்கள் அனுப்பி தமிழ் கிட்ட இருந்து அந்த ஆதாரத்தை எடுப்பதற்கு அனுப்புகிறார்.


மறுபக்கம், எப்படியாவது சரஸ்வதிய வெளியில் கொண்டு வருவதற்கு இந்த ஒரு ஆதாரம் தான் இருக்கு அப்படிங்கிறதால ரொம்ப பத்திரமா வச்சுக்கணும், இது இல்லாட்டி சரஸ்வதிய எப்பயுமே நாம வெளியில கொண்டுவர முடியாது அப்படின்னு நினைக்கிறாரு தமிழ். 

இதை தொடர்ந்து,  அந்த அடியாட்கள் தமிழிடம் வந்து அடித்து தகராறு பண்ணுறாங்க.. ஆனாலும், தமிழ் கடைசி வரைக்கும் அந்த ஆதாரத்தை கொடுக்கவே இல்ல.

ஒருத்தர போட்டு 10 பேர் அடிக்கிறத அங்க இருக்குறவங்க பார்த்துட்டு, தமிழ காப்பாத்துறதுக்காக ஓடி வாறாங்க. அந்த அடியாட்களுமே நிறைய பேர் வாரதை  பார்த்துட்டு, தமிழை  அப்படியே விட்டுட்டு ஓடி போயிடுறாங்க..


தமிழோ எப்படியாவது சரஸ்வதிக்குரிய ஆதாரத்தை நம்ம போலீஸ் கிட்ட ஒப்படைக்கணும்னு போலீஸ்கிட்ட போறாரு.. போலீஸ் கிட்ட ஆதாரத்தை கொடுத்துட்டு போலீஸ் ஸ்டேஷன்ல மயங்கி விழுகிறார்.

இதனால் பதறிய போலீஸ் காரங்க ஆதாரத்தை எடுத்து வச்சுக்கிட்டு தமிழ ஹாஸ்பிடலில் அட்மிட் பண்றாங்க ..அது மட்டும் இல்லாம அந்த வீடியோவ பார்த்துட்டு, இதுல முதல் குற்றவாளி அர்ஜுனோட மாமாதான் என அவங்கள அரெஸ்ட் பண்றாங்க..

இத பார்த்த அர்ஜுனோ ரொம்பவே பயப்பட ஆரம்பிக்கிறாரு. ஆனா ராகினியோ தமிழ்னா அன்னைக்கே சொன்னாரு, இப்போ  இவங்க தான் குற்றவாளி என்று உண்மை ஆயிருச்சு அப்படின்னு வருத்தப்படுறாங்க.

எனவே, அர்ஜுனோட உண்மையான முகம் கூடிய சீக்கிரமே ராகினிக்கு தெரிய வரப்போகுது. அப்போது ராகினியோட  ரியாக்ஷன் என்ன மாதிரி இருக்கும் அப்படி என்று பொறுத்து இருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement