• Apr 15 2026

'சைரன்' படத்தின் கதை இதுவா? வெளியான சூப்பர் அப்டேட்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ள படம் தான் சைரன்.

இந்த படத்தின் தலைப்பு சைரன் 108 என்று அண்மையில் மாற்றப்பட்டது. இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி, ஜோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்

ஹோம் மூவி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ள நிலையில், ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார்.

சைரன் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


அந்த வகையில் இந்த படம் ஆக்சன் திரில்லர் கதைகளை கொண்டு  உருவாகியுள்ளதாகவும், இந்த படம் எதிர் வரும் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சைரன் படம் தொடர்பிலான புதிய அப்டேட்டுகள் கிடைத்துள்ளது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அதாவது, இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் ஜெயம் ரவிக்கு மனைவியாக நடித்துள்ளதோடு, அவர் வாய் பேச முடியாத மனைவியாக காணப்படுகிறார்.

ஒரு கட்டத்தில் அவர் இறந்துவிட்ட நிலையில், அதற்காக ஜெயம் ரவி பழிவாங்குகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகின்றது.

எனினும் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement