• Apr 27 2026

விஜயை எதிர்க்க நானே போதும்.. - களத்தில் குதித்த ஜூலி.!

shali / 4 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் இந்த தேர்தலில் நேரடியாக களமிறங்கியுள்ள நிலையில், அரசியல் சூழல் அதிகம் சூடுபிடித்துள்ளது. அவர் போட்டியிடுவதாக அறிவித்த தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில் வேட்பு மனுத் தாக்கல் செய்து, தீவிர பிரசாரத்தையும் தொடங்கியுள்ளார். தனது பிரசாரத்தில், திமுக அரசை கடுமையாக விமர்சித்து, இந்த தேர்தலில் திமுகவுக்கும் தனது கட்சிக்கும் இடையே தான் முக்கிய போட்டி என வலியுறுத்தி வருகிறார்.


இந்நிலையில், ஜூலி திமுகவுக்கு ஆதரவாக களமிறங்கி, விஜய்க்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வீடியோவில், “முதலில் ஒழிக்க வேண்டியது ஃபாசிச ஒன்றிய அரசும், அதற்கு துணைபோகும் சக்திகளும் தான்” என கூறிய அவர், தன் மீது முன்பு வந்த மிரட்டல்கள் மற்றும் விமர்சனங்களை சுட்டிக்காட்டினார். மேலும், விஜய்க்கு எதிராக பேசும் பெண்களை அவரது ஆதரவாளர்கள் அவமதிப்பதாக குற்றம்சாட்டியும், இப்படியான சூழலில் அவர் வெற்றி பெறக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

அதோடு, சில அரசியல் சக்திகள் மாநிலத்திற்குள் நுழைய முயற்சி செய்கின்றன என்றும், அதில் விஜய் முக்கிய பங்கு வகிக்கிறார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“உங்களை எதிர்க்க என்னைப் போன்ற சாதாரண பெண்ணே போதும்” என்று சவால்விடும் வகையில் பேசிய அவரது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement