• Apr 27 2026

கண்ணே பட்டிடும் போலயே.. இன்ஸ்டாவில் லீக்கான சைத்ரா ரெட்டியின் போட்டோஷூட்

shali / 4 weeks ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்றாக திகழ்கிறது ‘கயல்’ சீரியல். இந்த தொடரில் நாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வருபவர் சைத்ரா ரெட்டி. தனது இயல்பான நடிப்பாலும், உணர்ச்சி மிகுந்த காட்சிகளாலும் குறுகிய காலத்திலேயே சின்னத்திரை ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார்.

சீரியலில் மட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சைத்ரா ரெட்டி, அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். அவரது ஒவ்வொரு பதிவும் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்டு, லைக்குகளையும் கமெண்ட்ஸ்களையும் குவித்து வருகிறது.


இந்நிலையில், அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த போட்டோஸ்களில் அவர் மிக எளிமையாகவும், அதே நேரத்தில் ஸ்டைலிஷாகவும் தோன்றியிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ரசிகர்கள் பலரும் அவரது அழகையும், சிரிப்பையும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இவ்வாறு சீரியலிலும், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து பிரபலமாகி வரும் சைத்ரா ரெட்டி, சின்னத்திரை நாயகிகளில் முன்னணியில் இருப்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.


Advertisement

Advertisement