• Jun 05 2026

விஜய்க்கு லீவு கொடுத்ததா சிபிஐ..?? வெளியான தகவல்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் மறு சென்சார் விவகாரத்தில், ரிவைசிங் கமிட்டி உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் வெளியீடு மேலும் தாமதமாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் மார்ச் 10ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.


இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் கோரிக்கை கொடுத்த நிலையில், அதனை சிபிஐ ஏற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் விஜய்யின் சினிமா, அரசியல் வாழ்க்கையில் மட்டுமில்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement