• Mar 09 2026

இரண்டு முறை தள்ளிப்போன ‘ஆல்ஃபா’ திரைப்படம்.. புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.!

shali / 2 hours ago

Advertisement

Listen News!

பாலிவுட் முன்னணி நடிகை ஆல்யா பட் நடித்துள்ள ‘ஆல்ஃபா’ (Alpha) திரைப்படம் ஜூலை 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படம் பிரபல தயாரிப்பு நிறுவனமான Yash Raj Films தயாரிப்பில் உருவாகி வருகிறது.


இந்த படத்தை இயக்குனர் ஷிவ் ரிவைல் இயக்கி வருகிறார். பாலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்த திரைப்படம் முதலில் அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியாகவில்லை. கிராபிக்ஸ் மற்றும் இறுதிகட்ட தொழில்நுட்பப் பணிகள் முழுமையாக முடிவடையாததால், வெளியீட்டு தேதி இரண்டு முறை மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘ஆல்ஃபா’ திரைப்படம் ஆக்ஷன் மற்றும் ஸ்பை த்ரில்லர் வகையைச் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் ஆலியா பட் மிகவும் வலிமையான மற்றும் தைரியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Yash Raj Films நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் பல வெற்றிப் படங்களை உருவாக்கி வருகிறது. குறிப்பாக ஸ்பை வகை திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

‘ஆல்ஃபா’ திரைப்படமும் அந்த ஸ்பை உலகின் ஒரு பகுதியாக இருக்கலாம் என சில வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்களிடையே அதிக ஆர்வம் உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement