• Apr 14 2026

அடேங்கப்பா.!! ராஷ்மிகாவின் மெஹந்தி போட்டோஸைப் பார்த்தீர்களா? இன்ஸ்டாவில் படுவைரல்

shali / 1 month ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் ஜோடிகளில் ஒருவராக கருதப்படும் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரின் திருமணத்தைச் சுற்றிய செய்திகளும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பேசுபொருளாகி வருகின்றன. கடந்த பிப்ரவரி 26ம் தேதி ராஜஸ்தானில் உள்ள பிரபலமான நகரமான உதய்பூரில் மிகுந்த பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது. 


திருமண விழா மிகவும் தனிப்பட்ட முறையில், நெருங்கிய குடும்பத்தினரும் நண்பர்களும் கலந்து கொண்ட நிலையில் நடைபெற்றது. 

இந்நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாள் அதாவது பிப்ரவரி 25ம் தேதி நடைபெற்ற மெஹந்தி விழாவின் சில புகைப்படங்களை நடிகை ராஷ்மிகா தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் அவர் ஸ்டைலிஷ் உடையில் மிகவும் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் காட்சியளிக்கிறார்.


இந்த புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாகத் தொடங்கின. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “கண்ணுபடப் போகுதப்பா!”,“பெர்ஃபெக்ட் ஜோடி” போன்ற கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள். அதே நேரத்தில் ஹார்டின் எமோஜிகள் மற்றும் வாழ்த்து செய்திகளும் குவிந்து வருகின்றன.

Advertisement

Advertisement