நடிகர் விஜய் - நடிகை திரிஷா தொடர்பான விவகாரம் சமீப காலமாக சமூக வலைத்தளங்களிலும் சினிமா வட்டாரங்களிலும் பேசுபொருளாக உள்ளது. இதற்கு சார்பாகவும் எதிராகவும் பலர் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
மேலும், விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியதாக தகவல்கள் வெளியான நிலையில், விஜய் மற்றும் திரிஷா ஒரே நிற உடையில் திருமண விழாவில் ஒன்றாக கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலானது. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விவகாரம் குறித்து ஒரு நிகழ்ச்சியில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் “குந்தவை வீட்டிலேயே இருந்தால் நல்லது” என கூறியிருந்தார். இதற்கு திரிஷா சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்தார்.
பின்னர் தனது கருத்தால் சிலருக்கு வருத்தம் ஏற்பட்டிருந்தால் மன்னிக்க வேண்டும் என பார்த்திபன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வெளியிட்ட மற்றொரு வீடியோவில், நான் வருத்தம் தெரிவித்து இருக்க வேண்டியதில்லை என குறிப்பிட்டு இருந்தார். இந்த விவகாரம் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விவாதமாகி வருகிறது.

இந்த நிலையில், பெண் ஜோதிடர் ஒருவர் திரிஷாவுடன் விஜய் இருந்தால் அவருக்கு தான் பலம் என தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், திரிஷா ஒரு மலையாளி . அவருக்கு பகவதி அம்மன் தான் குலதெய்வம். அவளோட சக்தி பயங்கரமா இருக்கும்.
விஜய் இந்த அளவுக்கு வளந்ததற்கு காரணமே திரிஷா தான். அவரோட பலம் தான். விஜய் கூட திரிஷா இருக்கிற வரைக்கும் விஜயை யாராலயும் எதுவுமே பண்ணமுடியாது. எல்லா நெகட்டிவும் ப்ளஸா மாறும் என தெரிவித்துள்ளார்.
Listen News!