• Mar 11 2026

அடிதூள் கிளப்பும் அனிமல் திரைப்படம் - 3ஆம் நாளில் வசூல் எவ்வளவு தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்திப் வங்கா ரெட்டி ரன்பீர் கபூரை வைத்து இயக்கிய அனிமல் படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரிலீஸ் ஆனது. 

ரன்பீர் கபூர் இந்த படத்தில் முதல் முறையாக கேங்ஸ்டர் ரோலில் நடித்து இருக்கிறார். படத்தின் மொத்த கதையையும் தன் தோள் மீது சுமந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருடைய நடிப்பிற்கு நிறைய பிரபலங்கள் பாராட்டுகளை அள்ளி குவித்து வருகிறார்கள்.


மேலும் வசூலிலும் ஒவ்வொரு நாளும் பட்டையை கிளப்பி வருகிறது அனிமல் திரைப்படம்.இப்படம் வெளிவந்து மூன்று நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 350 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

விரைவில் ரூ. 500 கோடியை தொடும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது . இதனால் இந்தத் திரைப்படம் ரன்பீருக்கு சிறந்த கம்பாக் திரைப்படமாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement