• Apr 14 2026

"வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன்.." த்ரிஷாவுக்கு பதிலடி கொடுத்த பார்த்திபன்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் – நடிகை திரிஷா ஒன்றாக திருமண விழாவில் கலந்து கொண்டது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையில், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் கூறிய கருத்து பேசுபொருளாகியுள்ளது. 

ஒரு நிகழ்ச்சியில் திரிஷாவின் புகைப்படம் காட்டப்பட்டபோது, “குந்தவை வீட்டிலேயே இருந்தால் நல்லது” என அவர் கூறியிருந்தார். இதற்கு நடிகை திரிஷா சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்தார். 

இதையடுத்து பார்த்திபன் தனது பேச்சால் சிலருக்கு வருத்தம் ஏற்பட்டிருந்தால் மன்னிக்க வேண்டும் என கூறி விளக்கம் அளித்தார்.மேலும் அந்த கருத்து திட்டமிட்டு கூறப்படவில்லை என்றும், நிகழ்ச்சியில் விரைவாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது வார்த்தை விளையாட்டாக கூறப்பட்டதாகவும் தெரிவித்தார். 

இந்த நிலையில், புதிய வீடியோ ஒன்றை வெளியிட்ட பார்த்தீபன் 'வருத்தம் தெரிவிக்க மாட்டேன்' என கூறியுள்ளார். அதன்படி அந்த வீடியோவில், ஒரு நிகழ்ச்சியில் விஜய் மற்றும் அஜித் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது திடீரென திரிஷாவின் புகைப்படம் காட்டப்பட்டதால் என்ன பேசுவது என தெரியாமல் திகைத்ததாக கூறினார்.


மேலும், தான் திட்டமிட்டு திரிஷாவை பற்றி பேசவில்லை என்றும், பணம் வாங்கி எந்த நிகழ்ச்சிக்கும் செல்லமாட்டேன்.  தவறும் செய்யமாட்டேன். திரிஷா வீட்டிலேயே இருந்திருக்க வேண்டும் என அந்தணன் உள்ளிட்டோர் சொன்னார்கள். 

கரூர் பிரச்னையில் கூட விஜய்க்கு விமர்சனங்கள் வந்தன. இந்த அளவுக்கு பாதிப்பு வரவில்லை. இவ்வளவு பாதிப்புக்கும் காரணமான பெண்மணி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம் என்பது எனது அடி மனதில் இருந்தது. 

ஆனால் அதை சொல்வதற்காக அந்த மேடைக்கு நான் செல்லவில்லை. நான் பிரச்னைகளை எப்போதும் விரும்பாதவன். அந்த வீடியோவை டெலிட் செய்ய சொன்னேன். ஆனால் வேறு வழியில் ரிலீஸ் ஆகிவிட்டது. 


நான் ஒரு மூன்றாவது மனுஷியை பற்றித்தான் பேசினேன். ஆனால் இதை பெண்களுக்கு எதிராக பேசியதாக கூறுகிறார்கள். அது எனக்கு ஒரு மாதிரி கஷ்டம் ஆகிவிட்டது. நான் வருத்தம் தெரிவித்தது ரொம்ப சின்சியராகத்தான் தெரிவித்திருந்தேன். 

ஆனால் இப்படி ஒரு ட்வீட் (திரிஷாவின் ட்வீட்) வரப்போகிறது என தெரிந்திருந்தால் நான் வருத்தம் தெரிவித்திருக்கவே மாட்டேன். மூன்றாவது மனுஷியின் மூன்றாம் தரமான ட்வீட்டால்தான் இதை பேசுகிறேன். அவரை பற்றி பொதுவெளியில் எக்கச்சக்கமான விமர்சனங்கள் இருக்கின்றன. அதற்கெல்லாம் அவர் பதில் சொல்லவில்லை. எனக்கு மட்டும் சொல்கிறார். 

இந்த விஷயத்தில் என்னுடன் நிற்பவர்களுக்கு நன்றி. நீங்கள் நன்மைக்கு பக்கத்தில் நிற்கவில்லை. உண்மைக்கு பக்கத்தில் நிற்கிறீர்கள்.. என குறிப்பிட்டிருக்கிறார். 

Advertisement

Advertisement