நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் நிதீஷ் சஹதேவ் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் ‘தலைவர் தம்பி தலைமையில்’. இந்த படம் வெளியான நாளிலிருந்தே ரசிகர்களிடையே கவனம் பெற்றுவருகிறது.

‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து இளவரசு, தம்பி ராமையா, பிரார்த்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமூக மற்றும் அரசியல் பின்னணியுடன், குடும்ப உணர்ச்சிகளையும் கலந்த கதைக்களத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதும், ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக ஜீவாவின் நடிப்பு மற்றும் காமெடி டைமிங் பலராலும் பாராட்டப்பட்டது.
திரையுலக வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவல்களின் படி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகளவில் ரூ.15 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூல், படத்தின் தொடக்க நிலைக்கு ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
Listen News!