தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்திருப்பவர் நடிகர் தனுஷ். அதேபோல், பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவில் குறுகிய காலத்தில் கவனம் பெற்ற நடிகையாக விளங்குபவர் மிருணாள் தாகூர். இவ்விருவரை இணைத்து கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.

முதலில், தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. சில புகைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சி சந்திப்புகளை வைத்து இந்த வதந்திகள் தீவிரமடைந்தன. ஆனால், இந்த காதல் கிசுகிசுக்கள் குறித்து இரு தரப்பிலும் இருந்து எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை. பின்னர், அந்த செய்திகள் உண்மையல்ல என தெரியவந்ததை தொடர்ந்து, காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் புதிய சர்ச்சையான தகவல் ஒன்று வெளிவந்தது. அதாவது, நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாகூர் வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி, காதலர் தினத்தன்று திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக பாலிவுட் திரையுலக வட்டாரங்களில் இந்த தகவல் தீவிரமாக பேசப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த திருமண செய்தி வெளியானதையடுத்து, தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியமும், குழப்பமும் ஏற்பட்டது. அதேபோல், மிருணாள் தாகூர் ரசிகர்களும் இந்த தகவல் உண்மையா இல்லையா என்ற கேள்வியில் சமூக வலைத்தளங்களில் விவாதங்களை தொடங்கினர். ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக தனுஷ் தரப்பிலிருந்தோ அல்லது மிருணாள் தாகூர் தரப்பிலிருந்தோ எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தனுஷுக்கு மிகவும் நெருக்கமான பிரபல பாலிவுட் இயக்குநர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளதாக, ஆங்கில செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த இயக்குநர் கூறியதாக வெளியாகிய தகவலில், “இப்படியொரு திருமணம் நடைபெறுவதாக தனுஷ் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. நாங்கள் தினமும் செல்போனில் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். யாருக்கும் தெரியாமல் அவர் எப்படி திருமணம் செய்துகொள்வார்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விளக்கம் வெளியானதையடுத்து, தனுஷ் – மிருணாள் தாகூர் திருமணம் குறித்து பரவிய அனைத்து தகவல்களும் வெறும் வதந்திகள் மட்டுமே என்பது தெளிவாகியுள்ளது.
Listen News!