ஜெயம் ரவி, சமுத்திரகனி, அனுபாமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்த திரைப்படம் தான் சைரன் 108 என்ற திரைப்படம். இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.
இந்த திரைப்படத்தின் கதை வித்தியாசமாக இருந்தாலும் மேக்கிங் மற்றும் எடிட்டிங் சொதப்பல் காரணமாக படம் பெரிதாக ஓடவில்லை. இந்த படத்திற்கு ஓடிடியில் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வந்தனர். இந்த படத்தை ஜெயம் ரவியின் மாமியார் தயாரித்திருந்தார்.
இந்த நிலையில் சைரன் படத்தை இயக்கிய அந்தோணி பாக்கியராஜ், ரம்யா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவர்களுடைய திருமண புகைப்படம் வைரலாகி வருகின்றது.

கடந்த மே 19ஆம் தேதி அந்தோணி பாக்கியராஜின் திருமணம் நடைபெற்றது. அதில் ஜெயம் ரவி, சிறுத்தை சிவா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.
முதல் படத்தை இயக்கி விட்டுத்தான் திருமணம் செய்வேன் என்ற முடிவோடு இருந்த அந்தோணி பாக்கியராஜ், சைரன் படத்தை முடித்த கையோடு திருமணத்தை நடத்தி முடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!