• Jan 19 2025

3 மாதங்களாக ஹீரோவை தேடி கொண்டிருக்கும் குட்டித்தளபதி ஜேசன் சஞ்சய்.. ஒரு வழியா லாக் பண்ணியாச்சு..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், குட்டி தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நிலையில் அவர் ஒரு திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்றும் அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகன் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் அவர் சில நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் தற்போது ஒரு நடிகரை அவர் லாக் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படமே அதிரடி ஆக்சன் படம் என்பதால் இதில் பிரபல நடிகர் ஒருவர்தான் நடிக்க வேண்டும் என்று அவர் முதலிலேயே முடிவு செய்ததாகவும் இதற்காக அவர் முதலில் அதர்வாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அந்த பேச்சுவார்த்தையில் திருப்தி இல்லை என்றும் கூறப்பட்டது.



அதன் பின்னர் அவர் விஜய் சேதுபதி உள்பட ஒரு சில நடிகர்களுடன் ஜேசன் சஞ்சய் பேசிய நிலையில் தற்போது நடிகர் கவினை அவர் லாக் செய்து இருப்பதாக தெரிகிறது. வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கவின் இதுவரை ரொமான்ஸ் படங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில் அவரை முதன்முதலாக ஒரு ஆக்சன் நடிகராக மாற்ற ஜேசன் சஞ்சய் முடிவு செய்திருப்பதாகவும், ஜேசன் சஞ்சய் கூறிய கதை கவினுக்கு திருப்தி ஏற்பட்டதை அடுத்து அவர் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.

விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அது மட்டும் இன்றி இந்த படத்தில் ஒரு சில பிரபலங்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தில் தனது தந்தை விஜய்யை நடிக்க வைக்க ஜேசன் சஞ்சய் விரும்பவில்லை என்றும் முழுக்க முழுக்க இது தன்னுடைய படமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்றும் எந்த காரணத்தை முன்னிட்டும் விஜய்யின் முத்திரை இதில் விழுந்து விடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் முதல் படத்திலேயே தெளிவாக திட்டமிட்டு சிறப்பான நட்சத்திரங்களை தேர்வு செய்திருக்கும் ஜேசன் சஞ்சய் கண்டிப்பாக வெற்றி படமாக கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement