• Jan 19 2025

2026ல் தான் போட்டி.. அதுக்காக குரல் கூட கொடுக்க கூடாதா? விஜய்யை வறுத்தெடுத்த பத்திரிகையாளர்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அந்த கட்சியை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன.

தற்போது கட்சியை ஆரம்பிப்பது குறித்த அறிவிப்பு வெளியான போதிலும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்றும், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டி என்றும் விஜய் தெளிவாக கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் அரசியல் கட்சி தொடங்கி பொதுவாழ்விற்கு வந்த பின்னர் 2026 ஆம் ஆண்டு முதல் தான் அரசியல் செய்ய வேண்டும் என்று கணக்கில்லை என்றும் தற்போது மக்களுக்கான பிரச்சனையில் குரல் கொடுக்கலாம் என்றும் ஆனால் விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார் என்ற அறிவிப்பு வெளியான போதிலும் எந்த பிரச்சினைக்கும் குரல் கொடுக்காமல் உள்ளார் என்றும் பத்திரிகையாளர் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.



அரசியல் கட்சி ஆரம்பித்து நேரடியாக முதல்வர் நாற்காலியில் மட்டுமே உட்காருவேன் என்ற நினைப்பில் இருக்கும் விஜய் அவ்வப்போது மக்கள் பிரச்சனை குறித்து குரல் கொடுக்க வேண்டும் என்று கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பிரச்சனை, வேங்கை வயல் பிரச்சனை, விலைவாசி பிரச்சனை,  மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி தராமல் ஏமாற்றும் பிரச்சனை உள்பட எந்த பிரச்சனையிலும் குரல் கொடுக்காத விஜய் நேரடியாக 2026 ஆம் ஆண்டில் வெற்றி பெற்று முதலமைச்சர் நாற்காலியில் மட்டும் உட்காருவேன் என்று கூறுவது எந்த வகையில் நியாயம் என்றும் அந்த பத்திரிகையாளர் கேள்வி எழுப்பி உள்ளார்.

அரசியல் கட்சி தொடங்கியதாக அறிவித்துள்ள விஜய் இன்னும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு கூட நடத்தவில்லை என்றும் பொது வாழ்க்கைக்கு வந்த பின்னர் சில நடைமுறைகளை அரசியல்வாதிகள் கடைபிடிப்பார்கள் என்றும், ஆனால் அதை எதையுமே விஜய் கடைபிடிக்கவில்லை என்றும் அந்த பத்திரிகையாளர் குற்றம் சாட்டியுள்ளார். இதனை ஒரு அறிவுரையை ஏற்றுக் கொண்டு இனிமேலாவது விஜய் மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement