சித்தாந்த் மல்ஹோத்ரா மற்றும் ஜான்வி கபூர் இணைந்து நடித்த ‘பரம் சுந்தரி’ திரைப்படம், வெளியீட்டுக்கு முன்னர் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. இந்நிலையில், இப்படம் ஆகஸ்ட் 29, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது. வெளியான சில மணி நேரங்களுக்குள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
‘பரம் சுந்தரி’ ஒரு ரொமாண்டிக் ஃபீல் குட் திரைப்படம். இதில், ஜான்வி கபூரின் ஸ்க்ரீன் பிரஸன்ஸ், காஸ்ட்யூம்கள் மற்றும் பார்வையாளர்களைக் கவரும் காதல் காட்சிகள் ரசிகர்களை ஈர்த்துள்ளன. சித்தாந்த் மல்ஹோத்ராவும், தனது previous action image-ஐ விட்டு விலகி, ஒரு மென்மையான காதல் கதாப்பாத்திரத்தில் கலக்கியுள்ளார்.
தற்பொழுது வெளியான தரவுகளின்படி, 'பரம் சுந்தரி' திரைப்படம் முதல் நாளில் ரூ. 7.25 கோடி வசூலித்துள்ளது. படம் பற்றி முதல் நாள் விமர்சனங்கள் நல்லவையாக இருந்ததாலே, இரண்டாம் நாள் வசூலிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், இரண்டாம் நாளான ஆகஸ்ட் 30, 2025 அன்று படம் ரூ.9 கோடி வரை வசூலித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமாகப் பார்க்கும் போது, படம் ரிலீஸான முதல் இரண்டு நாட்களில் ரூ.16.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கணிக்கப்படுகிறது.
Listen News!